
ரூட் மாறி இயக்கப்படுவதாக ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 16 தமிழக பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று கரூரில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆட்சியர் மலர்விழி, கல்லூரி முதல்வர் அசோகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்; கரூர் மாவட்டத்தில் 10ml தடுப்பூசி பாட்டில்கள் 780 வரப்பட்டு உள்ளது இதன் மூலம் 7800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நான்கு வார இடைவெளியில் ஒரு நபருக்கு இரண்டு முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான ஓய்வூதிய பலன் 972 கோடிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் ஆந்திரா பேருந்துகள் தமிழ்நாட்டில் வரும்பொழுது இன்டர்ஸ்டட் அக்ரிமெண்ட் அப்படி நடக்கவில்லை அதனால் நேற்று 5 ஆந்திரா பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அவர்களுக்கு பல முறை கடிதம் எழுதி இருக்கிறோம்.
ஆனாலும் ஆந்திரா, தெலுங்கானா பிரியும்போது சில குழப்பம் ஏற்பட்டது. அதேபோல தமிழக பேருந்துகள், 16 பேருந்துகளை அவர்கள் ஆந்திராவில் பறிமுதல் செய்துள்ளனர் தமிழக பேருந்துகள் ரூட் மாறி வருவதாக ஆந்திர பேருந்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக ஆணையர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. நேற்று 5 ஆந்திரா பேருந்துகளை விடுவிக்கப்பட்டது. அதேபோல ஆந்திராவிலிருந்து இன்று தமிழக பேருந்துகள் 16 பேருந்துகளை விடுவிக்கப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் எளிதாக வசதியாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆனால் போக்குவரத்துக் கழகத்திற்கு மிகவும் வருவாய் குறைந்துள்ளது…. என்றார்.