நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் பாவூர்சத்திரம் – கடையம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பணம்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். சோதனையில் திருடு போன பேட்டரிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த சேர்வகாரன் பட்டியை சேர்ந்த அருள், திப்பணம் பட்டியை சேர்ந்த சக்திவேல், மலையராமபுரம் பகுதியை சேர்ந்த வைத்திய லிங்கம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், திப்பணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காளிமுத்து ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் அருள், சக்திவேல், வைத்திய லிங்கம் மற்றும் இடையர்தவனை பகுதியை சேர்ந்த ஆணந்த் என்பவருடன் சேர்ந்து 26.05. 2016 அன்று டாஸ்மார்க் கண்காணிப்பாளரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் வழிபறி செய்ததையும் ஒப்புக் கொன்டனர். திருடிய 24 பேட்டரிகள், ஆட்டோ மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்
Popular Categories




