டி-20 இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

இந்தியா விளையாட்டு

டி-20 கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 2வது டுவென்டி-20 கிரிக்கெட்டில் 88 ரன்னில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. 43 பந்துகள் பிடித்த இவர் 10 சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடித்து 118 ரன்கள் எடுத்தார்.

லோகேஷ் ராகுல் 49 பந்தில் 8 சிக்ஸ் அடித்து 89 ரன் எடுத்தார். டி-20 போட்டியில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது. இதற்கு முன்பு 2016ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா 244 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

261 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடி இலங்கை அணி 17.2 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.