மைசூரு – மயிலாடுதுறை விரைவு ரயில் மீது மோதிய லாரி! பரபரப்பு!

train Tanjore
train Tanjore

கர்நாடகா மாநிலம் அனேகல் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது மைசூரு – மயிலாடுதுறை விரைவு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள்கிழமை இரவு 8.35 மணியளவில் கார்மேலராம் – ஹீலாலிஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டது.

சுமார் 1380 பயணிகளுடன் கார்மேலராம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அனேகல் மாவட்டம் உஸ்கூர் அருகே விபத்தில் சிக்க நேரிட்டது. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது ரயில் மோதியது.

train acc
train acc

அவஹள்ளி ரயில்வே கிராசிங்கை கவன குறைவாக கடக்க முயன்ற டிப்பர் லாரி ஓட்டுநர் ரயில் வருவதை பார்த்து லாரியில் இருந்து குதித்து தப்பியோடினார்.

இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ரயில் மோதியதில் லாரி நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டது. ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.

பலத்த மழைக்கு இடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார், 2 மணி நேரத்தில் உருக்குலைந்து போன லாரியை அப்புறப்படுத்தினர்.

விபத்தில் ரயில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். விபத்து காரணமாக குறிப்பிட்ட மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.

எனினும் ரயில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மைசூரு – மயிலாடுதுறை விரைவு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்ற பிறகு அந்த வழித்தடத்தில் செல்லும் கோவை விரைவு ரயில், மைசூரு – தூத்துக்குடி விரைவு ரயில், எஸ்வந்த்பூர் கண்ணூர் விரைவு ரயில் ஆகியவை இலக்கு நோக்கி புறப்பட்டு சென்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories