அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப் பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவு…
கரும்பு விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும், கிராமங்களில் சிறு தொழிலாக செய்யப்படும் வெல்ல உற்பத்தி மேம்படவும், இந்த வருடம் பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள பொருட்களில் சர்க்கரைக்குப் பதில் தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டது போல் வெல்லம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/1bftyVHEDd
— M.K.Stalin (@mkstalin) December 30, 2017



