gold jewellery gold chain 650 650x400 61487902416
gold jewellery

அரக்கோணத்தில் நகை வாங்குவதுபோல் நடித்து, கவரிங் செயினை மாற்றி வைத்து விட்டு, சென்ற சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தில், நகை வாங்குவதற்காக தாய் மற்றும் மகள் பஜார் தெருவில் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள உழியர்கள் தாங்க செயின்களை காமித்து வந்துள்ளனர். யாரும் கவனிக்காத நேரத்த்தில் தங்க செயின்னை பையில் எடுது வைத்துவிட்டு அவர்கள் கொண்டுவந்த கவரிங் செயின்னை வைத்து விட்டனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; பவன்குமார், அரக்கோணத்த்தில் வாழ்ந்து வருகிறார். இவர், பஜார் தெருவில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பவன் குமாரின் நகைக்கடைக்கு , நகை வாங்க 2 பெண்கள் வந்துள்ளனர்.

அவர்கள், கடை ஊழியர்களிடம் 5 பவுன்நிற்கு நகை வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அந்த பெண்கள் நகைக்கடை உரிமையாளர் பவன்குமாரிடம், நகைகளின் மாடல்களை காண்பிக்க கூறியுள்ளனர்.

அவர், பல விதமான நகைகளின் மாடல்களை காண்பித்துள்ளார். மாடல்களை பார்த்து விட்டு இருவரும் நகைகள் வாங்குவது போல் நாடகம் நடித்துள்ளனர். பவன்குமார் கவனிக்காத நேரத்தில் ஒரு பெண் தங்கச் சங்கிலி ஒன்றை திருடி வைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக தான் கொண்டு வந்த மற்றொரு கவரிங் சங்கிலியை மாற்றி வைத்துள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இதைக் கவனித்த கடை ஊழியர் ஒருவர், உரிமையாளர் பவன்குமாரிடம் இதை பற்றி தெரிவித்தார். கடை உரிமையாளரும், ஊழியர்களும் சேர்ந்து இரு பெண்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதில் ஒரு பெண் தப்பியோடி விட்டார். மற்றொரு பெண் பிடிபட்டார்.

இதுபற்றி பவன்குமார் அரக்கோணம் போலீசாரிடம் புகார் செய்தார். பிடிபட்ட பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சார்ந்த சுமதி என்றும் அவரின் வயது 50 என்றும் கூறினார், தப்பியோடியவர் தனது மகள் என்றும் அவர் பெயர் பிரியதர்ஷினி என்றும் கூறினார்.

தாய் மற்றும் மகள் சேர்ந்து இதுபோன்று பல்வேறு நகைக்கடைகளில் நகைகளை திருடியதும், அவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்ததுள்ளது. அரக்கோணம் டவுன் போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மகள் பிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர். அவருடன் வந்த தாய் தற்போது கைது செய்யப்பட்டார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending