
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் இந்த வலிமை திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தல அஜித் தெலுங்கு சினிமாவில் அவருடைய நண்பர் சி ராம் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இதே மா கத என்ற படத்தின் டீசரைப் பார்த்து பாராட்டி உள்ளார்.
படத்தின் டீசர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் காட்சிகள் ஒவ்வொன்றும் அழகாக இருப்பதாகவும் தனக்கு பைக் ரைட் மிகவும் பிடிக்கும் அந்த பைக் ரைட் காட்சிகள் தன்னை ஈசியாக தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த டீமுக்கும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் படக்குழு தல அஜித்துக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளனர்.
Thala #AjithKumar sir's appreciation for #IdheMaaKatha movie teaser. All the best, on behalf. @bhumikachawlat @TanyaHope_offl @GuruDepuru @gp_productions7 pic.twitter.com/bKNR58fWtj
— Ajith (@ajithFC) February 1, 2021