கல்குவாரி சரிந்து விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

Published:

Quarrying-of-stone
Quarrying-of-stone

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாத்தூர் கிராமத்தில் பிரபலமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்டோர் வேலைப் பார்த்து வந்தனர். அப்போது குவாரியின் ஒரு பகுதி சரிந்து அங்கு வேலைப்பார்த்து வந்தவர்களின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது

ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை உடைத்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related articles

Recent articles

spot_img