பிப்ரவரி 25, 2021, 1:06 காலை வியாழக்கிழமை
More

  மகள் வீட்டுக்கு சென்ற தாய்! மருமகனால் நேர்ந்த கொடூரம்!

  Home சற்றுமுன் மகள் வீட்டுக்கு சென்ற தாய்! மருமகனால் நேர்ந்த கொடூரம்!

  மகள் வீட்டுக்கு சென்ற தாய்! மருமகனால் நேர்ந்த கொடூரம்!

  murder-2-1
  murder-2-1

  குடும்பத் தகராறில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அளவாய் வரை வாடி கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய ஏழாவது மகளான ராமலட்சுமி என்பவரை இடிந்த கல்புதூர் கிராமத்தில் வசித்து வரும் மீனவரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பொன்னம்மாள் தனது மகளின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் அவருடன் தங்கி வந்துள்ளார்.

  இதனை அடுத்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு வந்தபோது பொன்னம்மாள் தனது மருமகனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பொன்னம்மாளின் இடப்பக்க மார்பில் குத்தி உள்ளார்.

  இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக இறந்துவிட்டார்.

  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari