பிப்ரவரி 25, 2021, 2:25 மணி வியாழக்கிழமை
More

  தூளியில் ஆடிய சிறுமி! துணி கழுத்தைச் சுற்றி பரிதாப மரணம்!

  Home சற்றுமுன் தூளியில் ஆடிய சிறுமி! துணி கழுத்தைச் சுற்றி பரிதாப மரணம்!

  தூளியில் ஆடிய சிறுமி! துணி கழுத்தைச் சுற்றி பரிதாப மரணம்!

  Cradle
  Cradle

  பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவரது வயது 40. இவரது மனைவி தமிழழகி. பன்னீர்செல்வம் மற்றும் தமிழழகி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பன்னீர்செல்வம் தனது வேலை காரணமாக பெங்களூருவில் தங்கியிருகிறார்.

  இந்த நிலையில் தமிழழகி நேற்று கூலி வேலைக்கு வீட்டிலிருந்து சென்று விட்டார். இவர்களின் மூத்த மகள் செல்வராணி. இவரது வயது 11. தனது அம்மா வேலைக்கு சென்ற காரணத்தால் மூத்த மகள் செல்வராணி தனது தங்கைகளுடன் புடவையில் தொட்டில் கட்டி விளையாடி உள்ளார்.

  செல்வராணி தொட்டிலில் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தொட்டிலில் கட்டியிருந்த புடவை அவரது கழுத்தை இறுக்கியது.

  தனது கழுத்து நெருக்கியதில் இருந்து தப்பிக்க முடியாத சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள்

  இதை கண்ட அந்த சிறுமியின் தங்கைகள் பதட்டம் அடைந்துள்ளனர். அதனால் இருவரும் அலறிக்கொண்டு கூச்சல் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் இவர்களின் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது தொட்டிலில் இறந்த நிலையில் செல்வராணி இருந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்த தோப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari