நீச்சல் பழக கிணற்றில் குதித்த சிறுமி! ஆடை இறுக்கியதால் மரணம்!

சற்றுமுன் தமிழகம்
well 1 - 2026

வந்தவாசி அருகே கிணற்றில் நீச்சல் பழகிய 5 ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் தமிழேந்தி. இவர் வல்லம் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தமிழேந்தி, தனது தோழிகளுடன் வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றுக்கு நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளார்.

உடலில் சேலையை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகியபோது, திடீரென தமிழேந்தியின் கை மற்றும் கால்களை சேலை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கை, காலைகளை அசைக்க முடியாமல் அவர் நீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழிகள் கூச்சலிட்டதால், அருகில் இருந்த தொழிலாளர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை தேடினர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரை மீட்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியின் சடலத்தை மீட்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வடவணக்கப்பட்டி போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.