பிப்ரவரி 25, 2021, 1:37 மணி வியாழக்கிழமை
More

  பிரபல நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்! பாலிவுட் திரையுலகினர் இரங்கல்!

  Home சற்றுமுன் பிரபல நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்! பாலிவுட் திரையுலகினர் இரங்கல்!

  பிரபல நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்! பாலிவுட் திரையுலகினர் இரங்கல்!

  Rajiv-kapoor
  Rajiv-kapoor

  பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர்(58) இன்று மும்பையில் காலமானார்.

  பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றார்.

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நாடு திரும்பிய நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே இந்த துயரம் உலுக்கியது.

  இருவரும் பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் கபூர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான ‘ராம் தேரி கங்கா மெய்லி’ 1983ம் ஆண்டு வெளியான ‘ஏக் ஜான் ஹைன் ஹம்’ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெயரையும் புகழும் பெற்றுத்தந்தது.

  தற்போது 58 வயதாகும் ராஜீவ் கபூருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சகோதரர் ரந்தீர் கபூர், மும்பை செம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே இருக்கும் இன்லாக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

  ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உட்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari