பிப்ரவரி 25, 2021, 5:31 காலை வியாழக்கிழமை
More

  மின்சாரம் கணெக்கெடுப்பில் குளறுபடியா? நடப்பது என்ன?

  Home சற்றுமுன் மின்சாரம் கணெக்கெடுப்பில் குளறுபடியா? நடப்பது என்ன?

  மின்சாரம் கணெக்கெடுப்பில் குளறுபடியா? நடப்பது என்ன?

  electric meter
  electric meter

  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால் முதல் 100 யூனிட்கள் இலவசமாக அரசு வழங்குவதால், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  உதாரணமாக ஒரு வீட்டில் 200 யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், முதல் 100 யூனிட்கள் இலவசம். அதற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு ரூ. 1.5 என்ற வீதத்தில் ரூ. 150, மேலும் நிலையான கட்டணம் ரூ.20 என மொத்தமாக ரூ. 170 வசூலிக்கப்படுகிறது.

  அதுவே ஒருவர் 101 – 200 யூனிட்கள் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டின் விலை ரூ.3.5 ஆக கணக்கிடப்பட்டு ரூ. 350 வசூலிக்கப்படும். இதே போல் 201 – 500 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ. 4.60 என்ற வீதத்தில் அதிகரித்து ரூ. 1,380 வசூலிக்கப்படும்.

  ஆனால் 500 – 510 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ. 6.60 வீதத்தில் கணக்கிடப்பட்டு நிலையான கட்டணம் ரூ. 20 என மொத்தம் ரூ. 1,816 வசூலிக்கப்படுகிறது. நாம் அதிகமாக 310 யூனிட்கள் பயன்படுத்தினாலே, முதல் 200 யூனிட்கள் பயன்படுத்தினால் வரும் கட்டணத்தை விட ரூ. 1,676 கூடுதலாக வருகிறது.

  இந்த சூழலில் மின்கட்டணம வசூலிப்பதில் மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த முறை வழக்கத்தை விட குறைவான மின் கட்டணமே வந்துள்ளதாக கூறுகின்றனர்.

  மேலும் சராசரியாக வரும் அளவை விட குறைவான ரீடிங்கை இந்த மாதம் எடுத்து விட்டு, அடுத்து வரும் மாதங்களில் சேர்த்துக் கணக்கிட்டால் 500 யூனிட்டை தாண்டிவிடும். இதனால் அதிகமான கட்டணம் செலுத்து வேண்டி வரும் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால் இதுகுறித்து மின்வாரிய் அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

  யூனிட்களை கணக்கிடுவதில் மோசடிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், சரியான முறையில் யூனிட்கள் கணக்கிடப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

  மேலும் இதுகுறித்து விசாரிக்கப்படும், விசாரணையில் மோசடி நடைபெறுவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari