ரேஷன்கார்டு திருத்தம்: இன்று முகாம்!

சற்றுமுன் தமிழகம்
ration-card-with-athar
ration-card-with-athar

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.