மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்: எல்.முருகன்!

Published:

murugan-interview
murugan-interview file picture

மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான், ராகுல் போன இடமே தோல்வி என்ற நிலைதான், ஏழை மாணவர்களின் வளர்ச்சியை தடுத்து திமுக நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்..

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில் …

சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக – பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளித்தார்கள், வரும் 25ஆம் தேதி கோவைக்கு பிரதமர் வருகை தருகிறார், 21ஆம் தேதி சேலத்திற்கு ராஜ்நாத்சிங் வருகை தருகிறார், பாஜகவின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம்

இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் இந்த தேர்தல் பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி பிரமாண்ட வெற்றிபெறும். அதிமுக – பாஜக உறுதிசெய்யப்பட்ட கூட்டணி. இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. திமுக தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்பதால் பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஸ்டாலினின் கனவு கனவாகவே மாறிவிடும் என்பதே உண்மை!

திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஏன் குறை தீர் கூட்டம் நடத்தவில்லை, இப்போது குறைதீர் கூட்டம் நடத்துவது என்பது அரசியலுக்கானது தேர்தலுக்கானது!

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக நவீன தீண்டாமையை கையில் எடுத்துள்ளது! கியாஸ் விலை, பெட்ரோல் விலை குறையும்!

மோடி கையைத் தூக்கிப் பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்! தமிழகம் வந்த ராகுல்காந்தி ஸ்டாலின் குறித்து எங்கும் பேசவில்லை! ராகுல் செல்லும் இடமெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது!

தலைசிறந்த ஆட்சியை தந்த அம்மாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதில் தவறில்லை! திமுக கூட்டணி உடையும் நிலை உள்ளதால் அதிமுக கூட்டணியிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது!

வேளாண் சட்டத்திற்கு எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை, விவசாயிகள் மோடியை தோழனாக பார்க்கின்றனர். கோ பேக் மோடி என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே வருகைதரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் அநாகரிகம், அதனை தாண்டி வெல்கம் மோடி என்ற நிலை உருவாகியுள்ளது.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திமுகவினரும், தேசவிரோதிகளும் தான் பிண்ணனியில் உள்ளனர், மோடி – எடப்பாடி சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது~

நாரயணசாமி செயல்பாடு பிடிக்காமல் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர், சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவித்த பின் எங்களது கருத்தை கூறுவோம் என்றார் எல்.முருகன்.

Related articles

Recent articles

spot_img