baby 1
baby 1

பிறந்து ஒரு வாரமே ஆனா தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ராஜீவ் சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி. ராஜீவ் மற்றும் சிவரஞ்சனி தம்பதியினருக்கு திருமணம் சில வருடத்துக்கு முன்பு நடந்தது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த வாரம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது..

தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு கணவர் ராஜீவ் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க விரைந்து சென்றார்.

ஆனால், அங்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால் பிறந்த குழந்தை தன்னுடைய முக சாயலில் இல்லை என்பதால். அதனால் அவர் இதை பற்றி அவரது மனைவி சிவரஞ்சனி இடம் கேட்டுள்ளார். குழந்தை ஏன் என்னுடைய ஜாடையில் இல்லை என்று கேட்ததும் சிவரஞ்சனி அதிர்ந்து போய்யுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இந்நிலையில் சிவரஞ்சனி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். பின் அவர் அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், மனைவியின் அம்மா வீட்டில் ராஜீவ் கோபத்தை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் வீட்டுக்கு அமைதியாக வந்து போய் சகஜமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ராஜீவ் குழந்தையை கொஞ்ச நேரம் நான் வைத்திருகிறேன் என்று கேட்டு, குழந்தையை வாங்கி உள்ளார்.

குழந்தையை கணவனிடம் குடுத்துவிட்டு சிவரஞ்சனி தூங்க போய்விட்டார். அப்போது ராஜீவ் லைட்டை ஆப் செய்துள்ளார். பின்னர் அந்த கொடூர தந்தை குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்துள்ளார். அத்துடன் விடாமல் அந்த பிஞ்சுவின் கழுத்தையும் நெரித்து கொன்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து எழுந்து பாத்த சிவரஞ்சனி, குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

பின்னர் தாய் குழந்தையை தூகிக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உடன் மருத்துவமனைக்கு ஓடினார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அதற்கு பிறகுதான் பிறந்த குழந்தையை இவ்வளவு கொடூரமாக கொன்றது தந்தை தான் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் ராஜீவை கைது செய்து தற்போது விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending