ஏப்ரல் 20, 2021, 2:52 மணி செவ்வாய்க்கிழமை
More

  +1 மாணவி தற்கொலை! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

  lady susid 2 1
  lady susid 2 1

  தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் 1 மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(வயது 37). இவர் பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோவர்த்தினி பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று சூர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

  வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பிய அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் கோவர்த்தினி திறக்காமல் இருந்ததனால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கோவர்த்தினி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

  இதனை அறிந்த மாங்காடு காவல்துறையினர் கதவை உடைத்து கோவர்த்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்த கோவர்த்தினி இந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி வந்ததாகவும். இதனை தாய் கண்டித்ததாகவும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோவர்த்தினி தூக்கில் தொங்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிளஸ் 1 மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »