குளத்தில் கிடந்த 7 ஐம்பொன் சிலைகள்!

சற்றுமுன் தமிழகம்
5gold-statue-1
5gold-statue-1

பேரூர் அருகே உள்ள புட்டுவிக்கி குளத்தில் 7 ஐம்பொன் சிலைகளை மீட்டெடுத்து பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி குளத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது ஓய்வு எடுப்பதற்காக குளத்தின் அருகே நின்றுள்ளனர்.

porur
porur

பின் குளத்தில் பார்த்த போது தண்ணீரின் உள்ளே 3 சாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் உடனடியாக பேரூர் போலிசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், குளத்தில் சிலைகள் கிடப்பதை உறுதி செய்தனர். அப்போது 7 சிலைகள் ஆங்காங்கே கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சிலையின் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

5gold-statue
5gold-statue

மேலும் சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை மற்றும் சிலை கடத்தலுக்காக குளத்தில் மறைக்கப்பட்டதா என்பது குறித்து பேரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.