பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

சற்றுமுன் தமிழகம்
power star - 2026

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

டாக்டரான பவர் ஸ்டார் சீனிவாசன் ஆக்டர் ஆவதற்கு முன்பு கிளினிக் வைத்து வைத்தியம் பார்த்து வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். லத்திகா என்ற படத்தில் நடித்து சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். இந்த படம் சென்னையில் ஒரு திரையரங்கில் ஓடி, அது தின பேப்பரில் தினமும் வெளிவந்து திரையுலகினரின் கவனத்தினை ஈர்த்தார்.
அடுத்து சந்தானத்துடன் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையினால் திஹார் சிறைக்கும் சென்று வந்தார்.

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு தனி இடதையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தினையும் உருவாக்கி வைத்திருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.