கரூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளருக்கு விருது வழங்கி கெளரவித்த காவல்துறை இயக்குநர்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur inspector - 2026

சென்னையில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று காவல் துறை இயக்குனர் சுனில் குமார் IPS அவர்கள் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களுக்கு அண்ணா விருது வழங்கினார்

மேலும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து கடந்த கொரோனா காலத்தில் பேஸ் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக மாஸ்க் தன்னுடைய சொந்த செலவில் வழங்கியது குறிப்பிடத்தக்கது

கடந்த 4 ஆண்டுகளாக கரூர் நகரில் வித்தியாசமான முறையில் தலைக்கவசம் உயிர்க்கவசம், செல்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதீர், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வுகளை பொது மக்களிடையே ஏற்படுத்தியவர்

இந்நிலையில் அண்ணா விருது வாங்கிய காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களுக்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை இயக்குநர் திரிபாதி உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.