வலிமை அப்டேட்: வைரலாகும் புகைப்படம்!

Published:

ajith 1 - 2026

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுவரை படத்தின் டைட்டிலை தவிர எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தல அஜித்தின் புகைப்படங்களும், வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் தான் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி டிரெண்ட் செய்து சந்தோஷத்தை தேடி வருகின்றனர்.

விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று கூறி வரும் நிலையில் தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அவர் சென்னையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதும், அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும், அதற்காக படத்தின் இசையமைப்பாளர் யுவன் மிகவும் சிறப்பான தீம் மியூசிக் அமைத்துக்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி படுத்தும் வகையில் நேற்று இசையமைப்பாளர் யுவன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் வலிமை மோஷன் போஸ்டர் ரெடியாகிவிட்டதாக கூறியிருந்தார்.

வேதாளம் பட கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டுள்ள அந்த புகைப்படங்களை தல ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img