bank-1
bank-1

சேலத்தில் வங்கிக்கு சென்று ₹1 லட்சத்தை எடுத்துக்கொண்டு பெண் மாயமானது குறித்து அவரது கணவன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் நெத்திமேடு எஸ்.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகலிங்கம். கூலி தொழிலாளியான இவரது மனைவி மகாலட்சுமி (40). இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி தாதகாப்பட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு பணம் எடுக்க மகாலட்சுமி சென்றார். பின்னர், அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்த மகாலட்சுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகலிங்கம் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர், இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் சண்முகலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending