காணாமல் போன கல்லூரி மாணவி! கிணற்றில் சடலமாக மீட்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
rajapalayam-lady-body-in-well3

திருப்புவனம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவி பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழராங்கியம் கிராமத்தில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்தார். திவ்யா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துள்ளார். அதன் பின் பிற்பகல் முதல் திவ்யாவை காணவில்லை.

இதையடுத்து திவ்யாவின் பெற்றோரும், அவரது உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து லிங்கம் பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திவ்யா கீழராங்கியம் கிராமத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் திவ்யாவின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.