அப்டேட் தந்த போனியே.. சாமியே..! போனி கபூருக்கு போஸ்டர் அடித்த தல ரசிகர்கள்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா தமிழகம்
valimai
valimai

அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் கொடுத்த போனி கபூரை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அஜித்தின் பிறந்த நாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. இதனை அடுத்து தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்களுக்கு அப்டேட்டை கொடுத்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் .

ponikapoor 1 - 2026

இந்நிலையில் கஷ்டப்பட்டு அப்டேட் வாங்கிய அஜித் ரசிகர்கள் குஷியாகி போனி கபூரை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘அன்பே அமுதே ஆருயிரே.. ‘போனியே தல 60 வலிமை அப்டேட் 3 மணிக்கு ட்வீட் செய்த சாமியே என வாசகங்கள் எழுதி இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.