3 சிலிண்டர்கள் வெடித்து டீக்கடையில் விபத்து!

சற்றுமுன் தமிழகம்
fire
fire

பல்லடத்தில் உள்ள டீக்கடையில் 3 சிலிண்டர்கள் வெடித்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அங்காளம்மன் கோவில் அருகே ஞானாம்பிகை என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

fire 1 - 2026

கடையில் தீ எரிவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.ஆனால் இந்த விபத்தில் டீக்கடை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின.

tea shop - 2026

சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நடந்தது தெரிய வந்தது.

gas cylinder - 2026

இந்த விபத்தின் காரணமாக அருகில் செயல்பட்டு வந்த அரசு மருந்து கடையில் சிலிண்டர் வெடித்த அதிர்வு ஏற்பட்டு கண்ணாடிகள் உடைந்து சேதாரம் ஏற்கப்பட்டுள்ளது, இந்த விபத்து கடை திறப்பதற்கு முன்பாக அதிகாலை நேரத்தில் நடைப்பெற்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.