மனுக்கொடுக்க பத்தாயிரத்தை மறந்து வந்த பத்மப்ரியா!

சற்றுமுன்
padhma priya1 - 2026

மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல். செய்தார்.

அப்போது வேட்புமனுவுக்கான கட்டண பணத்தை மறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பணத்தை அவரது உதவியாளர் வந்து கொடுத்து மனு தாக்கல் செய்ய வைத்தார்.

padhma vetphumanu - 2026

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

padhma - 2026

கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

ppriya - 2026

இன்று மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மநீம கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநிலச் செயலாளரும் அக்கட்சி மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா தனது ஆதரவாளர்களுடன் கட்சி சின்னமான டார்ச் லைட்டை கையுடன் எடுத்து வந்தார்.

manima - 2026

மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு டெபாசிட் பணம் 10 ஆயிரம் ரூபாய் மறந்து வந்தார். பின்பு அவரது உதவியாளர் பணத்தை கொண்டு வந்து கொடுத்து மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

padhma priya - 2026

மதுவாயல் தொகுதியில் தி.மு.க., சார்பில் காரம்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இங்கு பெஞ்சமின் போட்டியிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.