ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது!

Published:

rajini - 2026

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கெனவே தாதா சாகேப் பால்கே விருது என வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

இந்நிலையில், இதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img