
சிம்புவை வைத்து ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.
படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் விழா கொண்டாடப்பட்டது. நயன்தாரா கிறிஸ்துவர் என்பதால் ஈஸ்டர் பண்டிகையை வழக்கம்போல் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார்.
இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் ‘ஈஸ்ட்ர் நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது’ என பதிவிட்டுள்ளார்.