2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை!

Published:

gobhala krishnan - 2026

உதகையில் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

உதகை அருகே எதுமகண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர் இரண்டு வயது சிறுமியை வீட்டில் தனியாக பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்

கடந்த 2018 ஆம் ஆண்டிலும் தங்களது 2 வயது சிறுமியை வீட்டில் விட்டு சென்றிருந்தபோது வீட்டுக்கு வந்திருந்த கோபாலகிருஷ்ணன் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதனை அறிந்த அவரது பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோபாலகிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

அத்துடன் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related articles

Recent articles

spot_img