8 ஆம் மாதமே குழந்தை.. மனைவி மீது சந்தேகம்.. கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
mallika - 2026

கடலூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் வசிப்பவர் அருணாசலம் (31). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், லட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நடந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்து எட்டு மாதத்திலேயே லட்சுமிக்குக் குழந்தை பிறந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அருணாச்சலம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமி அடிக்கடி சில ஆண்களுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் லட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்த அருணாசலத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனையடுத்து கிரமத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.