திருவண்ணாமலை: மூலவர் மீது விழுந்த சூரிய கதிர்கள்! பக்தர்கள் பரவசம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
thiruvannamalai soorya kathir in linga - 2026

திருவண்ணாமலையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் பழமையான திருநேர் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள மூலவர் மீது ஆண்டிற்கு ஒருமுறை தமிழ் புத்தாண்டு தினத்தன்று சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அதன்படி, நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பை ஒட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7 மணி அளவில் கோவிலில் உள்ள மூலவர் மீது சூரியஒளி விழுந்தது.

சுமார் 5 நிமிட நேரம் வரை நீடித்த இந்த அரிய நிகழ்வினை, கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அண்ணாமலையாரை தரிசித்து சென்றனர்.

  • செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.