
போப்ரா ரைஸ்
தேவையான பொருட்கள்
சாதம் – 3 கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
முந்திரி – 10
பூண்டு – ஒரு பல்
பரங்கிக்காய் – 2 கீற்று
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பில்லை – ஒரு கொத்து
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும் வெங்காயம், பூண்டு இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பரங்கிக்காயைக் தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், முந்திரி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துருவல் போட்டு வதக்கவும். அதில் உள்ள ஈரப்பதம் வற்றியவுடன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
2 நிமிடத்திற்கு பிறகு இறக்கிவிட்டு, சூட்டோடு ஆறிய சாதத்தில் கலந்துவிடவும். கடைசியில் நெய் ஊற்றி நன்கு கிளறிவிடவும்.
சுவையான போப்ரா ரைஸ் ரெடி.