
திமுக பிரமுகர் பிளஸ் 2 படிக்கும் சிறுமியிடம் நடந்து கொண்ட அந்த அநாகரீக செயலை கண்டு தென்காசியே அதிர்ந்து போயுள்ளளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சோம செல்வபாண்டி. இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குகுழு உறுப்பினர் ஆவார். இதைதவிர மாவட்ட நெசவாளர் பிரிவு துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவருக்கு கல்யாணமாகிவிட்டது. ஆனால், குடும்பத்தை பிரிந்து தனியே வசித்து வருகிறார். அதனால், அந்த பகுதியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். இந்த ஓட்டல் ஓனர் இவரது பல வருட கால நண்பர் ஆவார். சின்ன ஓட்டலாக இருந்தாலும், இந்த ஓட்டலில்தான் பல காலமாக சாப்பிட்டு வருகிறார். எனவே குடும்ப உறுப்பினர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
இந்நிலையில், 12-ம் வகுப்பு படிக்கும் ஓட்டல் ஓனரின் மகளின் செல்போனுக்கு, சோமசெல்வ பாண்டி ஆபாச வீடியோக்களை கடந்த சில நாட்களாகவே அனுப்பி வைத்து வந்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணுக்கு போன் போட்டு ஆபாசமாகவும் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன சிறுமி, வீட்டில் விஷயத்தை சொல்லவும், குடும்பத்தினர் கொந்தளித்துபோனார்கள். உடனடியாக செல்பாண்டியனின் வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
சிறுமியின் எதிர்காலம் கருதி, இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது. ஆனால், திமுக பிரமுகரை அடித்து நொறுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.