mall
mall

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்தோற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.

இதனால், நாளை அதிகாலை 4 மணி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (all bars), அனைத்து பெரிய அரங்குகள் (auditoriums), கூட்ட அரங்குகள்(meeting hall) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனுமதி இல்லை.

பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க அனுமதி இல்லை.
வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Spas, Saloons, Barber shops) இயங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

கோல்ஃப், டென்னிஸ் கிளப் (club) உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் (sports training academy) செயல்பட அனுமதி இல்லை.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending