ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் ராஜினாமா

Published:

புது தில்லி ஆம் ஆத்மியின் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். KEJRIWALஇது குறித்து தமது ராஜினாமா கடிதத்தை அவர் செயற்குழுவுக்கு அனுப்பியுள்ளார். அதில், தில்லி முதல்வராக இருப்பதால் தம்மால் கட்சிப் பணியைப் பார்க்க இயலவில்லை என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், கட்சிக்கு விரைவில் புதிய ஒருங்கிணைப்பாளர் அமர்த்தப் படுவார் எனவும் அவர் அதில் கூறியுள்ளார் தாம் தில்லி மக்களின் வளர்ச்சிகாகவும் நலனுக்காகவும் பாடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, கேஜ்ரிவால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு, கட்சியை ஒருநபர் சார்ந்த கட்சியாக மாற்றி விட்டதாக கட்சியின் முக்கியத் தலைவர்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இன்று கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் துவங்கி நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img