மாறிப்போன சடலம்! தோண்டி எடுத்து ஒப்படைப்பு!

Cemetery - 2026

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாயமான சடலம் அதே மருத்துவமனையில் உயிரிழந்த மற்றொருவரின் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருசடி பகுதியைச் சேர்ந்த 71 வயதான செல்வராஜ் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ஆம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து இன்று செல்வராஜின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றபோது சடலம் மாயமானது தெரியவந்தது.

இதனால் மருத்துவமனை ஊழியர்களிடம் செல்வராஜின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாதிக்கப்பட்டவரின் சடலம் மாயமான சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கமணி என்பவரது சடலத்திற்கு பதிலாக செல்வராஜின் சடலத்தை தவறுதலாக வழங்கியதும் அதை அறியாமல் தங்கமணியின் உறவினர்கள் செல்வராஜின் சடலத்தை வாங்கிச் சென்று வட்டம் பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ததும் தெரிய வந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

பின்னர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இவ்விவகாரத்தில் தலையிட்டு தங்கமணியின் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்ட செல்வராஜின் சடலத்தை தோண்டி எடுக்க சென்றபோது உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

கடுமையான போராட்டத்துக்கு பின் புதைத்கப்பட்ட இடத்தில் இருந்து உடலை எடுத்து செல்வராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கமணியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் செல்வராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் தங்கமணியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சடலங்கள் தவறுதலாக வழங்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories