அதிர்ச்சி! விராலிமலையில் சிலைகள் உடைப்பு! இந்துக்கள் ஆவேசம்!

சற்றுமுன் தமிழகம்
viralimalai
viralimalai

விராலிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. பக்தர்கள் வசதிக்காக 4 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு வழியெங்கும் முருகன், சிவன், பார்வதி போன்ற சுவாமி சிலைகள் மான்,புலி, மயில். குரங்கு போன்ற விலங்குகளின் சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

viralimalai 1
viralimalai 1

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவில்களில் வழிபாடு செய்ய தடைவிதிக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில், விராலிமலை மலைக்கோவிலும் மூடப்பட்டுள்ளது.

அதனால் அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத சூழலில், மலைப்பாதையில் இருந்த சிவன், முருகன், பார்வதி ஆகிய கடவுள்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், சாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

viralimalai2
viralimalai2

இந்து மத கடவுள்கள் மற்றும் இந்து மதத்தினரின் நம்பிக்கையை இழிவுபடுத்துவதை சிலர் தொடர்ச்சியாக உள்நோக்கத்துடன் செய்துவரும் நிலையில், விராலிமலையில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த விராலி மலை தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், அதைக்கண்டு தனது மனது உடைந்து நொறுங்கிப்போனதாகவும், இச்செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

viramalai 3
viramalai 3

மேலும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன்.

viralimalai 1 1
viralimalai 1 1

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இழிவான செயலை செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.