கொரோனாதொற்று நீங்கி வீடு திரும்பிய பொன் இராதாகிருஷ்ணன்!

சற்றுமுன் தமிழகம்
pon radhakirshnan
pon radhakirshnan

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இன்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் சில நாட்களுக்கு தனிமையிலிருந்து ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.