ajith 3
ajith 3

தற்போது மீண்டும் கொரானா பரவல் அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் அவல மீண்டும் வரத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலரிடமும் நிதி வசூல் செய்து வருகின்றனர்.

அஜித் 25 லட்சம் ஏற்கனவே நிதி கொடுத்துள்ளார். கடந்த முறையே தல அஜித் கோடிக்கணக்கில் உதவி செய்தார் என்பது நினைவிருக்கலாம். அதோடு விட்டு விடாமல் தற்போதும் மக்கள் கஷ்டப்படுவதை அறிந்து 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

அதுபோக தனியாக 10 லட்சத்தை திரைப்பட தொழிலாளர் சங்கங்களுக்கு கொடுத்து உதவி செய்துள்ளார். இது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த வருடமே 1.25 கோடி இதையடுத்து அஜீத் இந்த வருடமும் மொத்தம் 35 லட்சம் வரை உதவி செய்துள்ளார்.

எப்போதும் அஜித் கொடுப்பது ஒரு கை கொடுப்பது மற்றொரு கை அறியாது கொடு என்ற வாக்கிற்கு இணங்க செயல்படுபவர்‌ விளம்பரப்பிரியர் அல்ல. ஆட்சி செய்யும் கட்சியைப் பொறுத்து கொடுப்பவரும் அல்ல. நான்கு பேர் சினி துறையில் சம்பாதித்தும் கொடுக்கும் அளவு சிறியதாக இருப்பதை மக்கள் அறிவதில்லை. ஒற்றை ஆளாக சம்பாதிக்கும் அஜித் போன ஆண்டிலிருந்து கொரோனாவிற்கு எதிராக செய்து வரும் உதவிகள் பல.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

போன வருடம் அவர் 1.25 கோடி கொடுத்துள்ளார். மேலும் இவ்வாண்டு 25லட்சம் கொடுத்துள்ளார் இது முதல்வர் நிவாரணநிதி மட்டுமே.

போன வருடமே இது தவிர அவர் பிரதமர் நிவாரணநிதி, திரை தொழிலாளிகளுக்கும் தனித்தனியாக கொடுத்துள்ளார். ஒரே இடத்தில் அன்றி பலருக்கும் சென்றடைய தக்க வகையில் அவர் செயல்படுவது யாவரும் அறிந்ததே.

அது மட்டுமில்லாமல் தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து வருகிறார்.

தொழிலாளர்களை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் குடும்பத்தையும் தன் வீட்டில் தங்க வைத்து பராமரித்து வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending