பிரபல வில்லன் நடிகர் மறைவு! திரையுலகினர் இரங்கல்!

சற்றுமுன் சினிமா தமிழகம்
George
George

பிரபல வில்லன் நடிகர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

காவல் ஆய்வாளராக இருந்து மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பி.சி.ஜார்ஜ். சாணக்கியம், அர்தவம், இன்னலே உள்ளிட்ட 68 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது.

வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொச்சியில் வசித்துவந்த அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.