பேஸ்புக் காதல்.. விடிய விடிய.. கதற கதற 28 பேர்.. காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

vankodumai - 2026

அரியானாவில் பேஸ்புக் நட்பை நம்பி கிராமத்திற்கு சென்ற பெண்ணை 28 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஊர் எல்லையில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலம் ஹசன்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள ராம்கரில் வசிக்கும் சாகர் என்பவர், பேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவரிடம் நட்பு கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணை தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவதாக கூறி, அவரை தனது கிராமத்திற்கு சாகர் அழைத்துள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணும் காதலனை நம்பி அவருடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சாகர் அந்தப் பெண்ணை ஒரு காட்டுப் பகுதிக்கு அதை அழைத்துச் சென்று தன் நண்பர்கள் 22 பேருடன் ஒரே நேரத்தில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்த நாள், மேலும் ஆறு நண்பர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்விவகாரம் வெளியே தெரியவரவே, போலீசார் 28 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரச்னா கூறுகையில், ‘சாகரின் அழைத்ததின் பேரில், கடந்த 3ம் தேதி ஹோடல் என்ற கிராமத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் சென்றார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அப்போது, அந்த பெண்ணை சாகர் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரது சகோதரர் சமுதார் மற்றும் 22 இளைஞர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் அந்த பெண்ணை அன்றிரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்தநாள் காலையில், அந்த பெண்ணை கிராமத்திற்கு அருகிலுள்ள தனது நண்பர் ஆகாஷ் கபரியின் வீட்டிற்கு சாகர் அழைத்துச் சென்றார். அங்கு, அவரது ஆறு நண்பர்கள் அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதன் பின்னர், சாகரும் அவரது மற்ற 3 நண்பர்களும் அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பதர்பூர் எல்லையில் விட்டுவிட்டு சென்றனர். 28 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண், தன்னுடைய வீட்டை அடைந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தார். அவரது பெற்றோர் விசாரித்ததில், முழு சம்பவத்தையும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து பெற்றோர் ஹசன்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், குற்றம்சாட்டப்பட்ட சாகர், சமுத்ரா, ஆகாஷ் உள்ளிட்ட 28 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories