thenmozhi das
thenmozhi das

இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக பணிபுரிந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் 50க்கும் அதிகமான பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமாகியுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி, இவரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே தனியாக வசித்து வந்தார் தேன்மொழி தாஸ்.

இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் இண்ஸ்டியூட்’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சிறுநீரகப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்.

கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் இவர் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending