
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என நடிகை குஷ்பு டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணியை அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன
தடுப்பூசி பற்றிய தவறான வதந்திகள் இன்னும் பரவிக் கொண்டு தான் இருக்கின்றது. தடுப்பூசி போட்டால் இறந்துவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் உள்ளவர்கள், அந்த வதந்தியை மற்றவர்களுக்கும் பரப்பி வருகிறார்கள். இதனால் பீதி அடைந்த நிறைய மக்கள் தடுப்பூசி போடாத நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தடுப்பூசிக்கு பஞ்சம் ஏற்படும் வகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்கள் பீதியின் காரணமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நிலைமையை நாம் காணமுடிகிறது. மக்களுக்கு எவ்வளவோ முறையில் எடுத்துச் சொல்லியும் தடுப்பூசியினால் எந்தவித அபாயம் இல்லை அவரவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பின்னர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தும் மக்கள் இன்னும் தவறான கண்ணோட்டத்தில், தான் இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அந்த கண்ணோட்டத்திற்குள் புகுத்தி வருகிறார்கள். இதில் சில கட்சிசார் ஊடகங்களும் கூட பெரும்பங்கு வகித்து வந்தன. எதிர்த்த பல எதிர்க்கட்சிகளால் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் அதனை தங்கள் அறிவுக்கு ஏற்றா வண்ணம் மக்கள் நடந்து வருகிறார்கள்.
எதையுமே மக்களிடம் ஏதாவது ஒரு கண்டிப்புடனும் சட்டத்துடன் கொண்டு சென்றால் மட்டுமே அவர்களை சரி செய்ய முடிகிறது. உதாரணமாக இன்று ஊரடங்கு போட்ட நிலையிலும் வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மக்களுக்கு கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் அபாரதங்களும் சோதனைகளும் பல கிடுக்குப்பிடிகளும் மட்டுமே பயத்தை கொடுத்து உள்ளது. அதன் மூலம் தான் கொஞ்சமாவது விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். அனைவரும் போட்டுக்கொள்ள எதாவது ஒரு வகையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு தன் டுவிட்டர் பகுதியில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரு ஆலோசனையைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பு ஊசி போட்டுவிட்டு வந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டுமென்றும், இது மாதிரி செய்தால் அனைவரும் தடுப்பூசியை போட்டு விடுவார்கள் என்றும் குஷ்பு டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆலோசனைக்கு ஆதரித்தும் எதிர்த்தும் பதிலளித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
Govt should bring out a rule of linking your vaccination record to your ration cards. Ration should be given to only those who are vaccinated. Atleast something to make those who are not getting vaccinated despite being eligible to come out and get it done. #GetVaccinated 🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 18, 2021