
வேலூரில் ஆட்டோவிற்கு ரூ.3 ஆயிரம் கேட்டதால் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் 20 கிமீ நடந்தே சென்ற கோர சம்பவம் நடந்தேறியுள்ளது.
பெங்களூரில் இருந்து ஒரு தம்பதியினர் காட்பாடிக்கு ரெயிலில் வந்தனர். வேலூர் அடுத்த கணியம்பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் காட்பாடியிலிருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோ இருக்கிறதா என்று தேடியுள்ளனர்.
அப்பொழுது ஆட்டோக்காரங்க 3000 ரூபாய் கேட்டுள்ளனர். காட்பாடியில் இருந்து கணியம்பாடி 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு ரூ.3 ஆயிரமா? என்று அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஊரடங்கு நேரத்தில் எந்தவித போக்குவரத்தும் இல்லையே என வருந்தினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பைகள், குழந்தைகளுடன் 20 கி.மீ தூரம் நடந்தே கணியம்பாடிக்கு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.