
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி எதிர்பாராமல் உயிரிழந்தார்.
தங்கச்சிமடம் முஸ்லிம் தெரு சேர்ந்த முகமது இப்ராஹீம், இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு மனைவி நிலோபர் நிஷா, இவரது மூத்த மகள் பர்சானா 14, நேற்று வீட்டின் எதிரே இருந்த மரத்தில் பர்சுனா, தன் தம்பி, தங்கையுடன் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடினார்.
அப்போது எதிர்பாராமல் பர்சானா கழுத்தில் சேலை இறுக்கியதால் சத்தமிட்டார். அவரது தம்பி, தங்கை இருவரும் வீட்டில் தாத்தா காசிமிடம் தகவல் தெரிவித்தனர். அவர் பர்சானாவை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.