
கரூரில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள் – 5 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் நீண்ட வரிசையில்… இன்று பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் வரிசையாக நின்று வருகின்றனர்.
அவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது வரிசையில் நின்ற நபர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பொதுமக்கள் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி நின்று வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கொரனோ தொற்று பரவாமல் இருக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டத்திற்கு என்று 6700 டோட்கள் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவற்றை மாவட்டத்தில் உள்ள 25 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி முகாம்களில் செலுத்தும் பணிகள் காலை 9.30 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. கரூர் நகரில் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் வரிசையாக நின்று வருகின்றனர்
அவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது வரிசையில் நின்ற நபர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பொதுமக்கள் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி நின்று வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த முகாமில் இன்று அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 9.30 மணி முதல் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தவுடன் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அதிகாலை முதல் காத்திருந்த பொதுமக்களும், டோக்கன் வைத்திருந்தவர்களுக்கும் ஒரே வரிசையில் அனுமதித்து தடுப்பூசிகள் செலுத்தப் படுவதால் பொதுமக்கள் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.