September 27, 2021, 10:01 am
More

  ARTICLE - SECTIONS

  3 மாதத்துக்குள்… மின் மிகை மாநிலம் டூ மின் தட்டுப்பாடு மாநிலம்! எப்படி? அண்ணாமலை கேள்வி!

  திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

  annamalai karur - 1

  மின் மிகை மாநிலம் மற்றும் மின் உபரி மாநிலமாம் தமிழகத்தில், திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

  தமிழ்நாடு 2006 – 11 அதிகமாக மின்வெட்டு இருந்து. பின்பு 2011 முதல் 2021 வரை மின் உபரியாக இருந்த மாநிலம் இப்போது மின் தட்டுப்பாடு புதிதாக திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

  கரூரில் பாஜக கட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் முதல்கட்டமாக கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிவாரண வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது… தமிழ்நாட்டில், 2006 – 11 காலத்தில் அதிகமாக மின்வெட்டு, அதுவும் இந்தியாவிலேயே அதிக அளவில் மின்வெட்டு மாநிலமாக இருந்து. 2011 முதல் 2021 வரை பின்பு மின் உபரி மாநிலமாக இருந்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எப்படி திமுக ஆட்சி அமைத்த இரண்டு மூன்று மாதத்தில் மின்தடை மாநிலமாக தமிழகம் மாறியது? காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது… மூன்று மாதத்திற்குள் மின் தடை ஏற்படுவது என்பது ஏற்புடையதல்ல!

  அதிலும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுவது என்னவென்றால், அணில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி அதன் மீது ஏறி அதன் மீது பொருத்தப்பட்டுள்ள பீங்கான் போன்றவைகளை கடித்ததன் காரணமாக மின் தடை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

  அணில் இந்தியா உருவான காலத்திலிருந்தே இருந்து வருகிறது, தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அணில் வரவில்லை! 2011 முதல் 2021 வரை அணில் இருந்தது. அப்போது ஏற்படாத மின்தடை இப்பொழுது எப்படி திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் ஏற்பட்டுள்ளது?

  அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு, செந்தில் பாலாஜி மின் துறையில் பணியாற்றும் பொறியாளர்களை மாற்றி விட்டதாகவும், அரசியலுக்காக யாரோ சுவிட்சை ஆப் செய்து ஆன் செய்துவிடுகிறார்கள் என்ற வாதமும் ஏற்புடையதல்ல! நிச்சயமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

  அதே போன்று தொழிற்சாலைகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளில் யுபிஎஸ் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது! மின் தடை ஏற்படுவதை குறை சொல்லவில்லை; ஆட்சிக்கு வந்த பிறகு ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து பார்க்கவேண்டும்! அவர்கள் சொல்லும் காரணத்தைக் குறை சொல்கிறேன்!

  இதுபோன்ற அணில் வருவதாக காரணம் சொல்ல வேண்டாம்! அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அணில் ஏறுமா? அப்படி அணில் ஏறினால் அதைப் பிடிப்பதற்கு புதிய துறை உருவாக்கப் படுமா? உண்மையான காரணத்தை ஆராய்ச்சி செய்து மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  மின்துறை மூலமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் கம்பிகளுக்கு மேலே வளர்ந்து இருக்கும் மரக்கிளைகளை வெட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் இதை ஒரு காரணமாக பயன்படுத்தி பல ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதை தவிர்த்துவிட்டு 24 மணி நேரமும் மின்சாரம்… மின்சாரம் தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!

  உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் நின்று வெற்றி பெறுவோம்! கூட்டணி கட்சியில் இருப்பதால் நாங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் பாஜக குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் திமுக விதைத்து இருக்கின்றது. நாங்கள் கொள்கைகளை மாற்றி பேச மாட்டோம்… என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,465FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-