vasantha - 2026

பள்ளிக்கு போக மாட்டேன் என்று கூறி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதன் வாழ்வு பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் இளைய மகளான வசந்தா என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரின் தந்தைக்கு போன் செய்து பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதால் அதை பெற்றுக் கொள்ளுமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தமிழ்ச்செல்வன் தனது மகள் வசந்தாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வசந்தா தனது பெற்றோரிடம் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட வசந்தாவின் பெற்றோர் அவரை திட்டி உள்ளனர். இதனால் வசந்தா மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இந்நிலையில் வசந்தா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு சென்ற வசந்தாவின் தாய் தனது மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து உடனடியாக வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வசந்தா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending