கடைக்குள் புகுந்த கார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Published:

car accident in madurai - 2026
  • கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்தது!
  • பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பெருமாள் கோவில் அருகே உள்ள நிலையூர் பஜார் பகுதியில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் . அப் பொழுது காரின் பிரேக் திடீரென பழுதானது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் காதில் இருந்த இளைஞர் யார் மீதும் மோதாமல் இருப்பதற்காக அருகே உள்ள கடைக்குள் காரை மோதி நிறுத்தினர். அப்பொழுது, எதிரில் மூன்று இளைஞர்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர் மீது கார் மோதியது. நல்வாய்ப்பாக அந்த இளைஞர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். பின்னர், அவர்களை விசாரித்த போது, காரில் பிரேக் பழுதானது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் காரை ஓரமாக நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது!

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img