குழந்தை கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இதயம் அறக்கட்டளை நிறுவனர் கைது!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
idhayam trust owner - 2026

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இதயம் அறக்கட்டளையின் நிறுவனர்  கைது!

மதுரையில் இதயம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் போடி அருகே கைது செய்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி தலைமறைவாகவுள்ள நிலையில் தற்போது போடி மெட்டு அருகே இரு வரையும் போலீசார் கைது செய்து மதுரை அழைத்து வந்தனர்.

கொரோனாவால்  ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்து விட்டதாக நாடகமாடி குழந்தையை 2 லட்சத்திற்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தசிவக்குமார் மற்றும் மாதர்ஷா வழக்கின் முக்கிய குற்றவாளிகளாவர்.

இருவரையும் போலீசார் தேனி மாவட்டம் போடி மெட்டு அருகே கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.